தனுசின் இந்தி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

நடிகர் தனுஷ் தனது படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாவதை விரும்புவது இல்லை.
தனுசின் இந்தி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?
Published on

நடிகர் தனுஷ் தனது படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாவதை விரும்புவது இல்லை. அவர் நடித்த ஜகமே தந்திரம் படத்தை தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய முயற்சி நடந்தபோது எதிர்த்தார்.

தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள், ரசிகர்களைப்போல் நானும் ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என்று கூறினார். ரசிகர்களும் படத்தை ஓ.டி.டி.க்கு கொடுக்கக்கூடாது என்று கண்டித்தனர். அதையும் மீறி ஜகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட்டு விட்டனர்.

இந்த நிலையில் தனுஷ் இந்தியில் நடித்துள்ள அந்த்ராங்கி ரே படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அக்ஷய்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான் நாயகியாக வருகிறார். ஆனந்த் எல்.ராய் இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

படத்தை டிசம்பர் மாதம் ஓ.டி.டி.யில் வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது. ஆனாலும் ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்து படக்குழுவினர் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com