தனுஷின் “கர” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு நடிக்கும் ‘கர’ படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகிறது.
தனுஷின் “கர” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது
Published on

சென்னை,

‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் நடக்கும் வங்கிக் கொள்ளைப் பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 30ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில், ‘கர’ படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. முன்னதாக, நடிகை மமிதா பைஜு, கேஎஸ் ரவிகுமார், சூரஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், ஜெயராம், பிரித்வி பாண்டியராஜன் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் ‘கர’ படத்தை தமிழகம் முழுவதும் பிரபலமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுமென அறிவித்துள்ளது. முன்னதாக, நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தினையும் இந்த நிறுவனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com