2000-க்கும் அதிகமான திரைகளில் வெளியான தனுஷின் “கர” திரைப்படம்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு நடித்துள்ள ‘கர’ படம் முதல் நாளில் ரூ 9 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
2000-க்கும் அதிகமான திரைகளில் வெளியான தனுஷின் “கர” திரைப்படம்
Published on

சென்னை,

‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று வெளியானது.

இந்நிலையில், ‘கர’ படம் நேற்று உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ 9 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com