தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
Published on

சென்னை,

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'நானே வருவேன்' திரைப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 4.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், "ஒரே ஒரு ஊருக்குள்ளே, இரண்டு ராஜா இருந்தாராம்.. ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதம் இறுதிக்குள் 'நானே வருவேன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com