தனுசின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடங்கியது

நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்து உள்ளார்.
தனுசின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடங்கியது
Published on

சென்னை,

டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தன்னுடைய 'வி கிரியேஷன்ஸ்' மூலம் தயாரிக்கிறார். மாரி 2 படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா மீண்டும் இந்த படத்தின் மூலம் தனுஷூடன் இணைகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அவர் தன்னுடைய பதிவில், இடைவிடாத படப்பிடிப்பு இனிதே ஆரம்பம் என டுவிட் செய்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com