தனுஷின் புதிய பட பூஜை வீடியோ வெளியீடு

தனுஷின் 54வது படத்தை “போர் தொழில்” பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க உள்ளார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தனுஷின் கைவசம் "இட்லி கடை, தேரே இஷ்க் மெயின்" ஆகிய படங்கள் உள்ளன.
இந்த நிலையில், தனுஷின் 54வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் அடுத்ததாக 'போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி உள்ளதாக தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் போஸ்டர் ஒன்றை கடந்த 10ம் தேதி வெளியிட்டு அறிவித்தார்.
தனுஷின் 54-வது படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நாயகியாக மமிதா பைஜூ, நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிக்கிறார்.
இந்நிலையில், தனுஷின் 54-வது பட பூஜையின் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், மமிதா பைஜூ பெயர் இடம்பெற்றுள்ளது, பூஜா ஹெக்டேவின் பெயர் இல்லாததால் நாயகி யார் என்ற குழப்பம் தீர்ந்துள்ளது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.






