தனுஷின் “ஓம்” படத்தின் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல்

தனுஷின் திரைப்பயணத்தில் அதிக முதல் நாள் வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை “ஓம்” பெற்றுள்ளது.
தனுஷின் “ஓம்” படத்தின் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல்
Published on: 

தனுஷின் ‘ஓம்’ திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘ஓம்’ திரைப்படம் கடந்த நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

முதல் நாள் வசூல்

தனுஷின் ‘ஓம்’ திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முந்தைய சாதனைகளை முறியடித்த ‘ஓம்’

இதற்கு முன்பு தனுஷின் அதிக வசூல் பெற்ற முதல் நாள் படமாக ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம் இருந்தது. அப்படம் முதல் நாளில் ரூ.16 கோடி வசூலித்திருந்தது. தற்போது அந்த வசூலைக் கடந்து ‘ஓம்’ புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், ‘ராயன்’, ‘குபேரா’, ‘கர’ உள்ளிட்ட தனுஷின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலையும் இப்படம் முந்தியுள்ளது.

உளவாளி மற்றும் செம்மரக் கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை, தமிழ்நாடு முதல் துபாய் வரை செயல்படும் கடத்தல் வலையமைப்பைச் சுற்றி அமைந்துள்ளது. முதல் நாளிலேயே நல்ல வசூலைப் பெற்றுள்ள இப்படம், வார இறுதி நாட்களில் மேலும் வசூல் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

X