ரீ-ரிலீஸாகும் தனுஷின் "புதுப்பேட்டை"


ரீ-ரிலீஸாகும் தனுஷின்  புதுப்பேட்டை
x
தினத்தந்தி 12 July 2025 11:06 PM IST (Updated: 25 July 2025 8:11 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 'புதுப்பேட்டை' திரைப்படம் வரும் 26ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

சென்னை,

பிரபல கதாநாயகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் நடித்த ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வருகின்றன. நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகிறது 'புதுப்பேட்டை' திரைப்படம்.

2006ல் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'புதுப்பேட்டை', ஒரு கல்ட் கிளாசிக் படமாக ரசிகர்களை கவர்ந்தது. இந்தப்படத்தில் முதன்முறையாக கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தனுஷ். சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். நடிகர் விஜய்சேதுபதி இந்தப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். கேங்ஸ்டர் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவானது.

இப்படம் வரும் 26-ம் தேதி புதுப்பொலிவுடன் 4கே தரத்தில் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியாகி தெலுங்கில் வரவேற்பை பெற்றது 'குபேரா'. இந்தப் படத்தை தொடர்ந்து அக்டோபர் மாதம் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். அடுத்து 'போர்தொழில்' படத்தின் இயக்குநருடன் கைகோத்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் படப்பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story