'ரெட்ட தல படத்தில் தனுஷின் பாடல் எல்லோரையும் மயக்கும்' - அருண் விஜய்


Dhanushs song in the film Retta Thala will enchant everyone - Arun Vijay
x

'ரெட்ட தல' படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்கி இருக்கிறார்.

சென்னை,

1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். கடைசியாக இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையில் வெளியான 'வணங்கான்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இவர், கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாடி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தநிலையில், தற்போது அதனை அருண் விஜய் உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

'ரொம்பவே உற்சாகமா இருக்கிறது. தனுஷ் அண்ணன் 'ரெட்டதல' படத்திற்காக பாடின பாடலை நீங்க எப்போது கேட்பீர்கள் என்பதை காண ஆவலாக இருக்கிறேன். இது எல்லோரையும் மயக்கும் என்று நம்புறேன்' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story