'கில்' படத்தின் ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம்!


கில் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம்!
x
தினத்தந்தி 19 May 2025 3:21 PM IST (Updated: 13 Aug 2025 1:03 PM IST)
t-max-icont-min-icon

'கில்' படத்தின் ரீமேக்கை இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கி, தயாரிக்கவுள்ளார்.

சென்னை,

பாலிவுட் இயக்குனர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் 'கில்'. கரண் ஜோகர் தயாரித்த இந்த படத்தில் லக்ஷயா, ராகவ் ஜுயல், தன்யா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் தென்னிந்திய மொழி ரீமேக் உரிமையை இயக்குனர் ரமேஷ் வர்மா கைப்பற்றியுள்ளார். 'கில்' படத்தினை ரீமேக் செய்ய திட்டமிட்ட ரமேஷ் வர்மா முதலில் இதில் கதாநாயகனாக நடிக்க வைக்க நடிகர் ராகவா லாரன்ஸை தேர்ந்தெடுத்தார். ஆனால் அவரிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவடையவில்லை.

அதனை தொடர்ந்து 'கில்' தமிழ் ரீமேக்கில் நடிக்க துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. துருவ் விக்ரம் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ரமேஷ் வர்மாவே இயக்கி, தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளன. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story