துருவ் விக்ரம் நடித்த 'பைசன்' படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் அக்டோபர் 17-ந் தேதி வெளியாகிறது.
துருவ் விக்ரம் நடித்த 'பைசன்' படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்!
Published on

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதனையடுத்து "கர்ணன், மாமன்னன், வாழை" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து 'ஆதித்யா வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' என்ற படத்தினை இயக்கியுள்ளார்.

இந்த படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தணிக்கை வாரியம் பைசன் படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தின் ரம் டைம் 2 மணி நேரம் 48 நிமிடம் என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com