துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார்.
துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு
Published on

கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஜாக்கி’ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், பின்னர் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து 'மகான்' திரைப்படத்தில் நடித்தார்.

'பைசன்' வெற்றிக்குப் பிறகு அடுத்த படத்தில் கவனம்

சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. குறிப்பாக, துருவ் விக்ரமின் நடிப்பு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.

துருவ் விக்ரமின் 4-வது படத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் கூட்டணி

தற்போது துருவ் விக்ரம் தனது 4-வது திரைப்படமான 'DV4'-ல் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். துருவ் விக்ரமும், மைத்ரி மூவி மேக்கர்ஸும் முதல் முறையாக இணைவதால், இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன்

'DV4' திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் கரண் ஏ. குமார், சந்தோஷ் நாராயணனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இந்த தகவலை அறிவித்துள்ளார். இயக்குநர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சந்தோஷ் நாராயணனின் இசை இந்த படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

படத்தின் டைட்டில் வெளியீடு

இந்த நிலையில், துருவ் விக்ரம் தனது 4-வது திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஜாக்கி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ரொமாண்டிக் - ஆகசன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com