துருவ் விக்ரம் - மணிரத்னம் கூட்டணியில் புதிய காதல் படம்


துருவ் விக்ரம் - மணிரத்னம் கூட்டணியில் புதிய காதல் படம்
x

மணிரத்னம் - துருவ் விக்ரம் இணையும் புதிய படப் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது.

சீயான் விக்ரமின் மகனாக திரையுலகிற்கு அறிமுகமான துருவ் விக்ரம், தனது திறமையான நடிப்பின் மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'பைசன்' திரைப்படத்தில் நடித்த துருவ் விக்ரம், இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிவடைந்ததையடுத்து, துருவ் தனது அடுத்தப் படத்திற்கான திட்டங்களில் இறங்கியுள்ளார்.

.தக் லைப் திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தெலுங்கு நடிகரான நவீன் பொலிஷெட்டி மற்றும் ருக்மினி வசந்த் இருவரும் இணைந்து காதல் கதையில் நடிக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மணிரத்னம் நடிகர் துருவ் விக்ரமை மற்றும் ருக்மணி வசந்தை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருவுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மினி வசந்த் நடிக்கவுள்ளார் . விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய 'ஏஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ருக்மிணி, தற்போது சிவகார்த்திகேயனுடன் 'மதராஸி' என்ற படத்தில் நடித்து இருகிறார். துருவ் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story