“புஷ்பா 2” பட வசூலை நெருங்கும் “துரந்தர் 2”

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர்’ இரண்டாம் பாகம் 18 நாட்களில் ரூ.1,622 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
“புஷ்பா 2” பட வசூலை நெருங்கும் “துரந்தர் 2”
Published on

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த மார்ச் 19ம் தேதி வெளியானது. பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், 3 மணி 49 நிமிடங்கள் நீளமுடையதாகும்.

வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், வெளியான 21 நாட்களிலேயே ‘துரந்தர் 2’ திரைப்படம் உலகளவில் ரூ.1,654 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 நாட்களிலேயே ‘துரந்தர் 2’ திரைப்படம் உலகளவில் ரூ.1,622 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த‘புஷ்பா 2 தி ரூல்’ படம் ரூ. 1742 கோடி வசூல் செய்திருந்தது. விரைவில் இப்படத்தின் வசூலை ‘துரந்தர் 2’ முறியடிக்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com