’துரந்தர் 2’ பட டீசர்... இந்த தேதியில் வெளியாகிறதா?

’துரந்தர் 2’ படம் மார்ச் 19 அன்று வெளியாக உள்ளது.
சென்னை,
ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. விரைவில் இப்படத்தின் 2-ம் பாகமும் திரைக்கு வர உள்ளது.
இரண்டாம் பாகம் மார்ச் 19 அன்று வெளியாக உள்ளது. இதனால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், துரந்தர் 2 படத்தின் டீசர் பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, வருகிற 23 ஆம் தேதி வெளியாக உள்ள பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’பார்டர் 2’ படத்துடன் இந்த டீசர் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






