"துரந்தர்" படம்: உலக அளவில் ரூ.944 கோடி வசூல்.. இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா?

ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர்’ படம் உலகளவில் ரூ.944 கோடி வசூல் செய்துள்ளது.
சென்னை,
ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரந்தர்’. 'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக நடித்து கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன் ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர்.
ஆதித்யா தார் இயக்கத்தில் இப்படம் கடந்த 5ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. சாஸ்வத் சச்தேவ் இதற்கு இசையமைத்திருக்கிறார். ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங் இந்திய உளவாளியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அக்ஷய் கண்ணாவின் தீம் மியூசிக், நடனம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
துரந்தர்’ படம் இந்து - முஸ்லிம் பிரச்சினை தூண்டுவதாக வெளியான விமர்சனத்தால் தங்கள் நாட்டில் வெளியிட 6 அரபு நாடுகள் தடை விதித்துள்ளன. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய 6 அரபு நாடுகளில் ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. துரந்தர் படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அரபு நாடுகள் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.
இந்த நிலையில், ‘துரந்தர்’ படம் 20 நாட்களில் உலகளவில் ரூ.944 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.607 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.






