

இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்கமாக ‘துரந்தர்’ படமும், நிவின் பாலி நடித்த ‘சர்வம் மாயா’ படமும் இந்தப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. ‘எல்லைகளைக் கடந்த கதைகள்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்விழாவில், 137 நாடுகளில் இருந்து 1,900-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திரைப்பட விழாவில் 137க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 1,900க்கும் அதிகமான படங்கள் பரிசீலனைக்கு வந்தன. இதில் 86 நாடுகளில் இருந்து 150க்கும் அதிகமான சர்வதேச படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன. இந்தியத் திரைப்படப் பிரிவில் 18 மொழிகளைச் சேர்ந்த 76 படங்கள் இடம்பெறுகின்றன.
இந்த்த திரைப்பட விழாவில் தொடக்கமாக போலந்து நாட்டின் இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி இயக்கிய ‘பாதர்லேண்ட்’ என்ற படம் திரையிடப்படுகிறது. விழாவின் ‘ஐ மேட்டர்’, ‘வி ஆர் ஆல் ஸ்டிரேஞ்சர்ஸ்’ என்ற படமும் திரையிடப்படவிருக்கிறது. பிரிக்ஸ் சினிமாவின் தொடக்கமாக ‘ராமாயணா’ படம் திரையிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்கமாக ‘துரந்தர்’ படமும் இறுதியாக ‘பிகம்மிங்’ என்ற படமும் திரையிடப்படும். நிவின் பாலி நடித்த ‘சர்வம் மாயா’ படமும் இந்தப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏழு புதிய சர்வதேச படங்கள் சிறந்த அறிமுக படம் என்ற பிரிவில் போட்டியிடுகின்றன. கோவா மாநிலத்தின் முதல்வர் பிரமோத் சாவந்த் தொடக்கி வைத்தார். இந்த விழாவினை நடத்தும் இயக்குநர் அசுதோஷ் கோவாரிகர், ‘எல்லைகள் இல்லா கதைகள்’ என்ற மைய கருவை முன்னிருத்தி திரைப்படம் எப்படி பார்வையாளர்களிடம் கலாச்சாரம், மனித உணர்வுகளை கதைகள் வழியாக உண்டாக்குகிறது என்பதை விவரித்து பேசினார்.