சம்பளத்தை குறைத்த தனுஷ்

நடிகர் தனுஷ் தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பளத்தை குறைத்த தனுஷ்
Published on

கொரோனாவுக்கு பிறகு தியேட்டர் தொழில் நசிந்துள்ளதால் நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கு பட அதிபர்கள் வேலைநிறுத்த போராட்டத்தையும் நடத்தினர். ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் உள்ளிட்ட சில தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க முன் வந்துள்ளனர். இந்த நிலையில் தமிழில் தனுசும் சம்பளத்தை குறைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் ஏற்கனவே ஒரு படத்துக்கு ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. தற்போது அவர் கைவசம் திருச்சிற்றம்பலம், தமிழ், தெலுங்கில் தயாராகும் வாத்தி படங்கள் உள்ளன. திருச்சிற்றம்பலம் திரைக்கு வர உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் சம்பளத்தை குறைத்து வாங்கி இருக்கிறார். அதிகபட்சம் ரூ.15 கோடிவரை பெற்றதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. தனுசின் முந்தைய படங்களான ஜெகமே தந்திரம், மாறன் ஆகிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com