'மகாராஜா' படத்தால் ஆஸ்கர் இயக்குனரிடம் இருந்து வந்த அழைப்பு - பகிர்ந்த நித்திலன் சுவாமிநாதன்


Did director Alejandro González Iñárritu watch Maharaja and offer Anurag Kashyap a role in his next?
x
தினத்தந்தி 19 Jan 2025 12:26 PM IST (Updated: 19 Jan 2025 12:28 PM IST)
t-max-icont-min-icon

'மகாராஜா' படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது.

சென்னை,

விஜய் சேதுபதி நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான படம் மகாராஜா. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்திருந்தநிலையில், சமீபத்தில் சீனாவிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில், மகாராஜா படத்தை பார்த்த ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர், அலெஜாண்ட்ரோ அவரது படத்தில் நடிக்க அனுராக்கை அழைத்ததாக இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'சமீபத்தில் மும்பையில் அனுராக் மகள் திருமணத்தில் அவரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் அலெஜாண்ட்ரோ தன்னை அவர் படத்தில் நடிக்க அழைத்ததாகவும் அதற்கு காரணம் 'மகாராஜா' படம்தான் என்றும் கூறினார். இதை கேட்டு எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.


1 More update

Next Story