ஹன்சிகா அழகை அதிகரிக்க ஊசி போட்டாரா...! ஆப்பிள் அழகியின் அம்மா அதிர்ச்சி பதில்

ஹன்சிகா தனது அழகை அதிகரிக்க ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்டதாக வதந்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
ஹன்சிகா அழகை அதிகரிக்க ஊசி போட்டாரா...! ஆப்பிள் அழகியின் அம்மா அதிர்ச்சி பதில்
Published on

மும்பை

தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால் உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தனது நீண்ட கால நண்பரும் தொழில் அதிபருமான சோஹைல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெய்பூரில் உள்ள பழமையான அரண்மனையில் இவர்கள் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த கையோடு மும்பையில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்று குடியேறி உள்ளார் ஹன்சிகா. அங்கு நடிகை என்பதை மறந்து சாதாரண குடும்ப தலைவியாக மாறி வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.

தற்போது திருமண வாழ்க்கையை அனுபவித்து வரும் ஹன்சிகா, சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் ஹன்சிகா தன்னைப் பற்றிய பரபரப்பான வதந்தி குறித்து வாய் திறந்தார். இந்த நிகழ்ச்சியில் ஹன்சிகாவின் அம்மா மோனாவும் கலந்து கொண்டார்.

ஒரு பிரபலத்தின் உடலில் சிறு மாற்றம் தெரிந்தாலும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும். அவர்கள் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்களா என்ற சந்தேகம் கிளம்புகிறது. ஹன்சிகாவுக்கும் அதுதான் நடந்தது. ஹன்சிகா தனது அழகை அதிகரிக்க ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்டதாக வதந்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.

இதுகுறித்து ஹன்சிகா கூறும் போது நான் 8 வயதில் நடிகையானேன். நான் வேகமாக வளர அம்மா ஊசி போட்டதாக மிக அநாகரிகமாக விளம்பரம் செய்யப்பட்டது. இதை எப்படி உண்மை என்று நம்புவது என்று ஹன்சிகா கூறினார்.

ஹன்சிகாவின் அம்மா மோனா கூறும் போது உண்மையாகவே ஹன்சிகாவை நான் ஊசி போட்டு வளர்த்திருந்தால் டாடா பிர்லாவை விட பணக்காரராக ஆகியிருப்பார். இப்படி பொய் பிரச்சாரம் பண்ண பொது புத்தியாவது இருக்கணும் என்று கோபத்தை வெளிப்படுத்தினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com