விஜய்தான் முதல்வர்னு சொன்னேனா? நடிகர் பார்த்திபன் விளக்கம்

தான் விஜய் குறித்து அப்படி பேசவே இல்லை என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
விஜய்தான் முதல்வர்னு சொன்னேனா? நடிகர் பார்த்திபன் விளக்கம்
Published on

தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காண்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜய் எங்கு போனாலும் அவரை நேரில் பார்க்க ரசிகர் கூட்டம் பெரிய அளவில் குவிந்துவிடுகிறது.

சமீபத்தில் தூத்துக்குடிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்க்கு வந்த கூட்டத்தை பார்த்து வியந்து போய் விட்டேன் விஜய்யை பார்க்க வேண்டும் என்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலையுடன் வந்து நின்றார்கள். தேர்தலுக்கு முன்பே விஜய்யை ஒரு முதலமைச்சராக மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்று நடிகர் பார்த்திபன் என நடிகர் பார்த்திபன் சொன்னதாக இணையத்தில் ஒரு செய்தி பரவியது.

இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் “ஒரு தவறான செய்தியை வெளியிட்டு, அது தவறெனத் தெரிந்ததும் அதை ரிமூவ் செய்து பின் அதற்கான வருத்தத்தை தெரிவித்ததை நான் மதிக்கிறேன்.என் பெயரில் வெளிவந்துள்ள மேற்படி கருத்து நான் சொல்லாதது. அதற்கான மறுப்பைக் கூட சொல்ல வேண்டாமென அமைதி காத்தேன் . ஆனால் ஒரு பத்திரிக்கையாள நண்பர் ‘ஏன் சார் இப்படி தேவையில்லா கருத்துகளை சொல்கிறீர்’ எனக் கேட்டார். உடனே இதை வெளியிட்ட நபரிடம் என் அலுவலக நபர் தொடர்பு கொண்டு “இதற்கான புரூப் தங்களிடம் உள்ளதா?” எனக் கேட்க அவரும் நாகரீகமாக “புரூபை காட்டுகிறேன், இல்லையென்றால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்“ என்று கூறி விட்டு சற்று நேரத்தில் அந்த போஸ்ட்டை ரிமூவ் செய்திருக்கிறார். போட்டது மட்டுமே பலருக்கும் தெரியுமேத் தவிர, எடுத்தது எவருக்கும் தெரியாது. வருத்தம் தெரிவித்த அவரது பண்பை சொல்லவே இதை பதிவிடுகிறேன். ‘ஜனநாயகன்’ தவறான முறையில் வெளியானது கொடுங்குற்றம். அதை பார்ப்பதோ பகிர்வதோ கடுங்குற்றம். குற்றம் என்பதை மீறி மனிதாபிமானமே அற்ற செயல். தண்டனையை சட்டம் வழங்கட்டும்.ஆனால், அதை பார்க்காமல் தவிர்ப்பதின் மூலமே வெளியிட்டவர்களின் சூழ்ச்சியை தவிடு பொடியாக்க முடியும். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com