சினிமாவில் நடிக்க நயன்தாரா புதிய நிபந்தனைகள்

திருமணத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்க இயக்குனர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்க நயன்தாரா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமாவில் நடிக்க நயன்தாரா புதிய நிபந்தனைகள்
Published on

டைரக்டர் விக்னேஷ் சிவனை மணந்துள்ள நயன்தாரா திருப்பதி கோவில் மாட வீதிகளில் செருப்பு அணிந்து கணவருடன் போட்டோ ஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்து விட்டு சென்னை திரும்புகிறார்.

திருமணத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்க இயக்குனர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்க நயன்தாரா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கதாநாயகனுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பது இல்லை என்றும், நடிகர்கள் தன்னை தொட்டு நடிக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்க இருக்கிறாராம். சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த ஜவான் இந்தி படத்திலும் காதல் காட்சிகளில் இருவரும் நெருங்காமல் தள்ளி நின்றே நடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com