

சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா குடும்பத்தினர் ரூ.200 கோடி கொடுக்க முன்வந்ததாகவும், நான் நன்றாகவே சம்பாதிக்கிறேன் எனக்கு பணம் தேவை இல்லை என்று சொல்லி அதை வாங்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் ஒரு சொகுசு பங்களா வீட்டை நாகசைதன்யாவிடம் இருந்து சமந்தா வாங்கி இருப்பதாகவும் அந்த வீட்டின் விலை ரூ.6 கோடி என்றும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. திருமணம் ஆனதும் சமந்தாவும், நாகசைதன்யாவும் ஐதராபாத்தில் சொந்தமாக பங்களா வீடு வாங்கி குடியேறினார்கள். அந்த வீட்டுக்கு அதிக செலவு செய்து உள் அலங்கார வேலைப்பாடுகளும் செய்தனர்.
விவாகரத்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அந்த வீட்டில் இருந்து நாகசைதன்யா வெளியே வந்து விட்டார். சமந்தா தற்போது அந்த வீட்டில்தான் குடியிருக்கிறார். இந்த வீட்டை ஜீவனாம்சமாக சமந்தாவுக்கு நாகசைதன்யா கொடுத்துவிட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாக தெலுங்கு இணைய தளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. வீட்டில் இரண்டு நாய்குட்டிகள் வளர்த்தனர். அதையும் ஆளுக்கு ஒன்றாக பிரித்து எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.