திருமணத்துக்கு முன்பு கர்ப்பமான நடிகைகளை கேலி செய்தாரா டாப்சி?

திருமணத்துக்கு முன்பு கர்ப்பமான நடிகைகளை கேலி செய்தாரா டாப்சி?
Published on

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த டாப்சி இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி ஒரு கேள்விக்கு அதிர்ச்சி பதில் அளித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

அதாவது ரசிகர் ஒருவர் உங்கள் திருமணம் எப்போது என்று டாப்சியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த டாப்சி "நான் இன்னும் கர்ப்பம் ஆகவில்லை. எனவே விரைவில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை'' என்றார்.

ஏற்கனவே இந்தியில் சில நடிகைகள் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானார்கள். இந்தி நடிகை அலியாபட் கர்ப்பமான பிறகே ரன்பீர் கபூரை மணந்தார். இவர்களுக்கு ஏப்ரல் 14-ந் தேதி திருமணம் முடிந்த நிலையில் நவம்பர் 6-ந்தேதி அலியாபட்டுக்கு குழந்தை பிறந்தது.

இதுபோல் இலியானாவும் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகி உள்ளார். அலியாபட், இலியானாவை போன்று திருமணத்துக்கு முன்பு கர்ப்பமான நடிகைகளை கேலி செய்யும் வகையில் மறைமுகமாக இந்த பதிலை டாப்சி தெரிவித்து இருப்பதாக இந்தி பட உலகினர் பேசுகிறார்கள். டாப்சியின் பதில் வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com