பிறந்தநாளில் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்றாரா திரிஷா?

தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள நிலையில் அதில் அவர் பகிர்ந்த சாய்பாபா புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
பிறந்தநாளில் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்றாரா திரிஷா?
Published on

நேற்று முன்தினம் நடிகை திரிஷா தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 40 வயதைக் கடந்தும் தனது அழகால் அசரடிக்கும் த்ரிஷாவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தனது பிறந்தநாளுக்காக நேரம் எடுத்து வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நடிகை திரிஷா நன்றி சொல்லும் விதமாக பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். 

பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வந்த மலர்கொத்துகளுடன் செஸ் விளையாட்டில் உள்ள குயினுடனும் கேக் வெட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார் திரிஷா. அதோடு சாய்பாபா புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். முன்னதாக, தனது பிறந்தநாளுக்காக திரிஷா சென்னையில் உள்ள நடிகர் விஜயின் சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபட்டதாக தகவல் வெளியானது.

View this post on Instagram

அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் திரிஷா. நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவை பிரிந்து இருப்பதாக சொல்லப்படும் நிலையில், விஜய் - சங்கீதா பிரிவுக்கு திரிஷா காரணமா? கீர்த்தி சுரேஷ் காரணமா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல நாட்களாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், த்ரிஷா, நடிகர் விஜய் கட்டியிருக்கும் சாய்பாபா கோயிலுக்கு பிறந்தநாளில் சென்றிருப்பது குறித்து ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

விஜய் தற்போது நடித்து வரும் 'கோட்' படத்திலும் விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com