ரஜினி படம் பார்த்து நடிகையானேன்? - சுனைனா

ரஜினி படம் பார்த்து நடிகையானேன்? - சுனைனா
Published on

தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகமாகி பிரபல நடிகையாக உயர்ந்த சுனைனா தற்போது டொமின் டி சில்வா இயக்கி உள்ள ரெஜினா படத்தில் நடித்து இருக்கிறார். சதீஷ் நாயர் தயாரித்துள்ளார்.

நடிகையான அனுபவம் குறித்து பட நிகழ்ச்சியில் சுனைனா பேசும்போது, "என்னுடைய குடும்பத்துடன் அமர்ந்து 2006-ல் தொலைக்காட்சி பார்க்கின்ற ஒரு சின்னப்பெண்ணாக இருந்தேன். அந்த சமயத்தில் சினிமாவிற்கு வருவேனா என்றெல்லாம் தீர்மானித்து இருக்கவில்லை. விடுமுறையில் ஐதராபாத்துக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது நான் பார்த்த படம்தான் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி'.

அந்த படம் பார்த்ததும் தென்னிந்திய மொழி நடிகையாக ஆகவேண்டும் என முடிவு செய்தேன். தொடர்ந்து ரஜினிகாந்த், சூர்யா நடித்த பல படங்களை பார்த்தேன். அந்த சமயத்தில் எனக்குள்ளே சினிமா குறித்த ஆர்வம், நேர்மை எல்லாம் இருந்தது. இப்போதுவரை அது இருக்கிறது. வெங்கட்பிரபுவின் சரோஜா படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகை.

மனதில் வருத்தம் ஏற்படும் சமயத்தில் எல்லாம் சரோஜா படத்தில் வரும் பிரம்மானந்தம் நடித்த காமெடி காட்சிகளை பார்த்து ரசிப்பேன். ரெஜினா படத்திற்காக அதிக அளவில் அன்பையும், உழைப்பையும் கொடுத்துள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com