'இந்தியன் 2-ல் இல்லை 3-ல்... - இயக்குனர் சங்கர் கொடுத்த அப்டேட்

இந்தியன் 2 படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
Did you know Kajal Aggarwal is not part of 'Indian 2' but 'Indian 3'? Director Shankar reveals
Published on

சென்னை,

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில், இப்படத்தில் நடித்த காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய இயக்குனர் சங்கர், நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவில்லை என்று அவர் இந்தியன் 3-ல் வருவார் என்றும் கூறினார்.

இந்தியன் 2' திரைப்படம் வருகிற ஜூலை 12-ந்தேதி வெளியாக உள்ளது. அதனைத்தொடர்ந்து 6 மாதங்களில் இந்தியன் 3 வெளியாகலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com