திரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது தெரியுமா?

கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'குருவி' திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார்.
திரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது தெரியுமா?
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா. இருவரும் நட்புக்காக அறியப்பட்டவர்கள். இருந்தபோதிலும், சில ஆண்டுகளுக்கு முன்பு, தனிப்பட்ட தவறான புரிதலால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழில் வெளியான 'குருவி' திரைப்படத்தில் நடிப்பது தொடர்பாக திரிஷாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இருவரும் தங்களுக்குள் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து தெளிவுப்படுத்தினர்.

இது குறித்து பேட்டியொன்றில் திரிஷா, 'எங்கள் இருவருக்குமிடையே தவறான புரிதல் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அது தொழில் காரணங்களால் அல்ல; தனிப்பட்டது. இதனால் சிறிது காலம் பேசாமல் இருந்தோம். ஆனால் சண்டை போடவில்லை. இவ்வாறு கூறினார்.

மேலும், இது குறித்து நயன்தாரா, கருத்து வேறுபாட்டுக்கு பின் சமரசம் செய்ய திரிஷா தன்னை முதலில் அணுகியதாகவும், பின்னர் இருவரும் பேசத்தொடங்கியதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com