ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை ஸ்ரீதேவி?

நடிகை ஸ்ரீதேவி ரஜினியுடன் இணைந்து 'மூன்று முடிச்சு' என்ற படத்தில் நடித்துள்ளார்.
ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை ஸ்ரீதேவி?
Published on

சென்னை,

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் இந்திய சினிமாவின் "முதல் பெண் சூப்பர் ஸ்டார்" என்று குறிப்பிடப்பட்டவர். 1967-ம் ஆண்டு தமிழில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார். இவர் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்தார், இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு தனது 54 வயதில் காலமானார்.

இவர் கே.பாலசந்தர் இயக்கிய 'மூன்று முடிச்சு' (1976) என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ஸ்ரீதேவியும், ரஜினிகாந்தும் புதுமுகங்களாக நடித்திருந்தனர். மேலும் கமல்ஹாசனும் அந்த படத்தில் நடித்துள்ளார். இவர், பிரகாஷ் ராஜின் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தமிழ் படத்தில் முதல் முறையாக அறிமுகமானதை பற்றிய தனது அனுபவத்தையும், 'மூன்று முடிச்சு' படத்தில் தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் நடிகை ஸ்ரீதேவிக்கு ரூ.5000 வழங்கப்பட்டது. அதே நேரத்தில் புதுமுகமான ரஜினிகாந்திற்கு ரூ.2000 சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்த கமல்ஹாசனுக்கு ரூ.30,000 சம்பளம் கொடுக்கப்பட்டது என அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com