அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் ''ராவணம்''


Dil Raju confirms Raavanam with Allu Arjun & Prashanth Neel
x
தினத்தந்தி 2 July 2025 8:15 PM IST (Updated: 2 July 2025 8:16 PM IST)
t-max-icont-min-icon

தில் ராஜு அடிக்கடி தனது பேச்சால் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்துவார்.

சென்னை,

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு அடிக்கடி தனது பேச்சால் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்துவார். அந்த வகையில், மீண்டும் அவரது பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

அதன்படி, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ''கே.ஜி.எப்'' பட இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோரின் கூட்டணியில் ''ராவணம்'' என்ற படத்தை விரைவில் தயாரிக்க உள்ளதாக அவர் கூறி இருக்கிறார்.

இப்படம் உருவாக சிறிது காலம் ஆகும் என்றும் ஆனால், அது கண்டிப்பாக நடக்கும் என்றும் தில் ராஜு கூறி இருக்கிறார்.

நிதின் நடித்துள்ள ''தம்முடு'' படம் வருகிற 4-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் தில் ராஜு தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

1 More update

Next Story