8 ஆண்டுகளாக எனக்கு பேச சுதந்திரம் இல்லை - நடிகர் திலீப்

திரைப்படங்கள் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பற்றி பேச, கடவுள் ஒரு நாள் எனக்கு வாய்ப்பளிப்பார் என்று நடிகர் திலீப் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
8 ஆண்டுகளாக எனக்கு பேச சுதந்திரம் இல்லை - நடிகர் திலீப்
Published on

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி அடுத்தபடியாக சீனியர் நடிகர்களின் இப்போதும் ஆக்டிவாக நடித்து வருபவர் திலீப். ஆனால் கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்று ஜாமினில் வெளிவந்த பிறகு பெரும்பாலும் படங்களில் நடிப்பதை மட்டுமே செய்து கொண்டு அமைதியாக இருந்து வருகிறார். அவர் சிறையில் இருந்த சமயத்தில் கூட அவரது நடிப்பில் வெளியான ராம்லீலா திரைப்படம் 100 கோடி வசூலித்து ரசிகர்கள் அவர் மேல் கொண்டிருந்த அபிமானத்தை வெளிப்படுத்தியது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கதைத்தேர்வில் அவர் கோட்டை விடுவதால் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'பிரின்ஸ் அன்ட் பேமிலி' படம் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெற்றி சந்திப்பை படக்குழுவினர் நடத்தினார்கள்.

இந்த நிகழ்வில் நடிகர் திலீப் பேசும்போது, "எப்படி எனக்கு இக்கட்டான சமயத்தில் ராம்லீலா திரைப்படம் கை கொடுத்ததோ, அதேப்போல தற்போது பிரின்ஸ் அன்ட் பேமிலி திரைப்படமும் எனக்கு கை கொடுத்துள்ளது. எட்டு ஆண்டுகளாக நான் என்னுடைய படங்களை பற்றி மட்டுமே பேசி வருகிறேன். வேறு எந்த விஷயத்தை பற்றி பேசுவதற்கும் எனக்கு சுதந்திரம் இல்லை. ஆனால் ஒருநாள் கடவுள் நிச்சயமாக நான் பேசுவதற்கு எனக்கு அந்த வாய்ப்பை கொடுப்பார். அந்த ஒரு நாள் வரும் வரை நான் அமைதியாக காத்திருப்பேன்" என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

View this post on Instagram

பிரபல நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கின் விசாரணை மற்றும் இந்த விவகாரம் தொடர்புடைய சர்ச்சைகளால் திலீப்பின் கரியரும் வெகுவாக பாதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற 21ம் தேதி நடைபெறும் என எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில், பாதிக்கப்பட்டவர் மற்றும் எதிர்தரப்பினர் தங்கள் வாதங்களை முன்வைக்கும் பட்சத்தில் விசாரணையின் தீர்ப்பு மற்றொரு தேதியில் வழங்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com