கிளாமர் ரோல் - ’ நடிகையை குறை சொல்வதில் அர்த்தமில்லை’- டிம்பிள் ஹயாதி

‘பெத்தி’ திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் கதாபாத்திரம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
கிளாமர் ரோல்  - ’ நடிகையை குறை சொல்வதில் அர்த்தமில்லை’- டிம்பிள் ஹயாதி
Published on

ஐதராபாத்,

திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்படும் விதம் குறித்து திரையுலகில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், நடிகை டிம்பிள் ஹயாதி தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

‘பெத்தி’ சர்ச்சைக்கு பின் அதிகரித்த விவாதம்

‘பெத்தி’ திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து படத்தின் இயக்குநர் புச்சி பாபு சானா மன்னிப்பு கேட்டார்.

“இது நல்ல மாற்றம்”

முன்னதாக நடிகை அனசூயா பரத்வாஜ் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது டிம்பிள் ஹயாதியும் தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார். பெண் கதாபாத்திரங்கள் எவ்வாறு காட்டப்படுகின்றன என்பது குறித்து விவாதம் நடப்பது வரவேற்கத்தக்க மாற்றம் என்று அவர் கூறியுள்ளார்.

“நடிகைகளை திட்டாதீர்கள்”

இது குறித்து அவர் பகிர்ந்த பதிவில்,

"ஒரு படத்தில் பெண் கதாபாத்திரம் கவர்ச்சியாகவோ அல்லது வலுவில்லாமலோ காட்டப்பட்டால், அதற்கு அந்த நடிகையைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. கதையை எழுதும் எழுத்தாளரும், அதை இயக்கும் இயக்குநரும்தான் அதற்குப் பொறுப்பு.

திரையுலகில் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், அடுத்தடுத்த நிலைக்குச் செல்லவும் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நடிகைகள் இருக்கிறார்கள்.

ஒரு படத்தில் கிளாமராக நடித்துவிட்டால், அடுத்தடுத்து அதே போன்ற கதாபாத்திரங்களே நடிகைகளுக்கு வழங்கப்படுகின்றன. அவர்களின் உண்மையான நடிப்புத் திறமை (Acting potential) இதனாலேயே பல நேரங்களில் முடக்கப்படுகிறது. ஹீரோக்களுக்குக் கிடைக்கும் சுதந்திரம் நடிகைகளுக்குக் கிடைப்பதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரவி தேஜா உடன் ’பர்தா மஹாசஹ்யுலகு விக்யாப்தி’ திரைப்படத்தில் நடித்திருந்த டிம்பிள் ஹயாதி, தற்போது ஷர்வானந்த் நடிப்பில்,சம்பத் நந்தி இயக்கும் ’போகி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com