நெருக்கமான காட்சியில் நடிக்க மறுத்த நடிகை...சமாதான படுத்தி நடிக்க வைத்த இயக்குனர்

பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் ஒரு படத்தில் காதல் காட்சியில் நடிக்க இவர் மறுத்திருக்கிறார்.
மும்பை
'பாபி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டிம்பிள் கபாடியா. அப்படத்தில் தனது அப்பாவி தோற்றம், பிகினி கவர்ச்சி ஆடை மற்றும் பெரிய பழுப்பு நிற கண்களால் பார்வையாளர்களை கிறங்க வைத்தார்.
'காஷ்', 'திரிஷ்டி', 'ருடாலி 'உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமல்ஹாசனுடன் 'விக்ரம்' திரைப்படத்தில் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில், பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் ஒரு படத்தில் காதல் காட்சியில் நடிக்க டிம்பிள் மறுத்திருக்கிறார். அதை பற்றி பார்ப்போம். அனில் கபூரும் டிம்பிள் கபாடியாவும் 1986-ம் ஆண்டு ''ஜான்பாஸ்'' படத்தில் இணைந்து நடித்தனர். பெரோஸ் கான் இயக்கிய இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

இந்தப் படத்தில் பண்ணை வீட்டில் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே சில நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது காட்சிக்காக அனில் தனது சட்டையை கழற்றியபோது, மார்பு முழுவதும் அடர்த்தியான முடி இருந்ததை பார்த்து டிம்பிள் அந்த காட்சியில் நடிக்க மறுத்திருக்கிறார்.

பின்னர் இயக்குனர் பலமுறை கேட்டுக்கொண்டதால் இறுதியாக, அந்தக் காட்சியில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இருப்பினும் படப்பிடிப்புக்கு பின் அனில் கபூரை ''முடி கடை'' என டிம்பிள் கிண்டல் பண்ணதாக கூறப்படுகிறது.






