நடிகர் தினேஷ் பிறந்தநாளையொட்டி “வேட்டுவம்” கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ள ‘வேட்டுவம்’ படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய 'அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இரவது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது வேட்டுவம் என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார். மேலும், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடிக்கிறார். இந்தப் படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது.

இந்நிலையில், நடிகர் தினேஷ் பிறந்தநாளையொட்டி வேட்டுவம் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com