ஹரி இயக்கும் படத்தில் அருண்விஜய் ஜோடி, பிரியா பவானி சங்கர்

தமிழ் திரையுலகில் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர், அருண்விஜய். இவர் இப்போது ‘சினம்’, ‘அக்னி சிறகுகள்’, ‘பார்டர்’ ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். மூன்று படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வர உள்ளன.
ஹரி இயக்கும் படத்தில் அருண்விஜய் ஜோடி, பிரியா பவானி சங்கர்
Published on

அருண்விஜய்யும், பல வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர் ஹரியும் ஒரு புதிய படத்தில் இணைந்து இருக்கிறார்கள். இருவரும் (மச்சான்-மைத்துனர்) நெருங்கிய உறவினர்கள்.இந்தப் படத்தில் அருண்விஜய் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர், கல்லூரி மாணவியாக வருகிறார். படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரத்தில் நடந்தது. ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு, கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மீண்டும் ராமேஸ்வரத்தில் தொடங்கி, தொடர்ந்து நடை பெறுகிறது.

அருண்விஜய், பிரியா பவானி சங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இவர்களுடன் ராதிகா சரத்குமார், ராஜேஷ், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஜெயபாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com