

சென்னை
தமிழில் கமல்ஹாசன் நடித்த கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா மற்றும் மகராசன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். பழம்பெரும் திரைப்பட டைரக்டரான இவருக்கு வயது 90. சென்னையில் இன்று காலை இவர் காலமானார்
ஜி.என்.ரங்கராஜன் ஜி.என்.ஆர் குமரவேலனும் திரைப்பட டைரகடர். இவர் வாஹா, யுவன் யுவதி, ஹரிதாஸ் மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் தனது தந்தை மறைவுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில், எனது தந்தை, எனது வழிகாட்டி, எனது அன்புக்குரியவர்... இன்று காலை 8.45க்கு காலமானார். எங்கள் குடும்பத்திற்கு உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
ரங்கராஜனின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.