முத்தையா இயக்கத்தில், ஆர்யா

ஆர்யா நடிக்கும் புதிய படத்துக்கு `ஆர்யா 34' என தற்போதைக்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள். முத்தையா டைரக்டு செய்கிறார்.
முத்தையா இயக்கத்தில், ஆர்யா
Published on

டெடி, சார்பட்டா பரம்பரை என மாறுபட்ட படங்கள் மூலம் நடிப்பு திறமையை காட்டிய ஆர்யா, இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

"முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் எங்களது அடுத்த திரைப் படத்தில் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆர்யா தொடர்ந்து மாறுபட்ட பாத்திரங்களில் வித்தியாசமான படங்கள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். இயக்குனர் முத்தையா அனைத்து தரப்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்து கொண்டவர். இவர்கள் கூட்டணி பார்வையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் என்பது உறுதி. சிறந்த உள்ளடக்கங்கள் கொண்ட, பல அற்புதமான படங்களை வழங்கிய ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. நாங்கள் அனைவரும் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை தரும், நல்ல படைப்பை வழங்குவோம் என்று நம்புகிறோம்" என்கிறார்கள் படக்குழுவினர்.

கிராமத்து பின்னணியில் அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படியான படம் இது. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com