

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ஜப்பான். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. இதையடுத்து தனது அடுத்தடுத்த படங்களை வெற்றிப்படங்களாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார்.
இந்நிலையில், நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய பிரபலமான இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார். இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'மெய்யழகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.