

அனில் ரவிபுடி ‘ராமாயணா’ அனிமேஷன் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
தெலுங்கில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து கவனிக்கப்படுபவர் இயக்குநர் அனில் ரவிபுடி. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் ரிலீஸாக தன் திரைப்படத்தைக் கொண்டு வருவதால் அந்த பண்டிகையின் இயக்குநர் என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இவர் இயக்கிய பகவந்த் கேசரி, சங்கராந்தி வஸ்துனம், மன ஷங்கர வர பிரசாத் காரு ஆகிய திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்றன. அனில் அனில் ரவிபுடி இயக்கத்தில் கடந்த 2026 பொங்கல் அன்று வெளியான படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்' . இப்படத்தில், வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
வெங்கடேஷ், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி உள்ளிட்டோரை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். ‘ஜனவரி 12 விடுதல’ படம் வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ‘ராமாயணா’ கதையை அனில் ரவிபுடி அனிமேஷன் திரைப்படமாக உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. விஷ்ணுவின் அவதாரங்களை ஹொம்பாலே பிலிம்ஸ் அனிமேஷனாக எடுத்துவரும் சூழலில் கேவிஎன் நிறுவனம் ராமாயண கதையை அனிமேஷன் ஆக தயாரிப்பதற்கான திட்டத்தில் உள்ளது.