முதல்வர் விஜய்க்கு இயக்குனர் அறிவழகன் உணர்ச்சிப்பூர்வமான பதிவு

தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் ஏற்றுள்ள இந்த மகத்தான புதிய பரிணாம மாற்றத்திற்கு,எனது உளமார்ந்த வாழ்த்துகள் என அறிவழகன் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு இயக்குனர் அறிவழகன் உணர்ச்சிப்பூர்வமான பதிவு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த விஜய், நேற்று நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், குற்றம் 23 பட இயக்குனர் அறிவழகன் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் சார், நான் உங்களிடம் விவரித்துக் கூறிய திரைக்கதையில் இடம்பெற்றிருந்த ஒரு வசனம் இது; நீங்கள் என்மீது பொழிந்த அந்த அன்பையும், எனக்கு அளித்த அந்தச் சிறப்பான விருந்தோம்பலையும் நான் இன்றும் நெஞ்சில் போற்றிப் பாதுகாக்கிறேன்.

இன்று, 'திரைப்படக் கலையின் சக்தி' (Power of Cinema) — ஒரு 'நாயகனிடமிருந்து' ஒரு 'தலைவனாக' நீங்கள் மேற்கொண்டிருக்கும் அந்த அரிய பயணத்தின் வாயிலாகத் தொடர்ந்து பயணித்து, மக்களின் நலனுக்கான ஒரு சக்தியாக என்றென்றும் உருமாறியிருப்பதை இது பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் ஏற்றுள்ள இந்த மகத்தான புதிய பரிணாம மாற்றத்திற்கு,எனது உளமார்ந்த வாழ்த்துகள். என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பா தீராவிடம்.. நடிகன்னா திரையில நல்லது செய்யலாம் கெட்டதும் செய்யலாம்... ரசிப்பாங்க ... ஆனா ஹீரோன்னா என்ன தெரியுமா? திரையில மக்களுக்கு நல்லது செஞ்சா... அநியாயத்த தட்டி கேட்டா... நிஜத்துலேயும் நீ அப்படித்தான் செய்வேன்னு நம்புவாங்க .. அந்த நம்பிக்கைதான் ஹீரோ உன்னை உயரமா எங்க கொண்டு போய் வைப்பாங்கன்னு உனக்கே தெரியாது... 60 வருஷம் சினிமா கலந்த அரசியல் இது.. என்றும் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com