மதுவை தெரியாமல் குடிக்க வைத்து பாலியல் தொந்தரவு: நடிகை புகாரில் இயக்குனர் கைது

நடிகை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் கன்னட இயக்குனர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுவை தெரியாமல் குடிக்க வைத்து பாலியல் தொந்தரவு: நடிகை புகாரில் இயக்குனர் கைது
Published on

கன்னட திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் ஹேமந்த். இவர் மீது நடிகை ஒருவர் மும்பைக்கு அழைத்து சென்று தனக்கு தெரியாமல் மதுவை கலந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஹேமந்த்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து நடிகை கொடுத்த புகார் மனுவில், கடந்த 2022-ம் ஆண்டு ரிச்சி படத்தில் நடிக்க ஹேமந்த் வாய்ப்பு கொடுத்தார். 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி படத்தின் விளம்பரத்திற்காக மும்பை அழைத்து சென்றார். அங்கு எனக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மதுவை கலந்து குடிக்க வைத்தார். இதைத்தொடர்ந்து தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்து பாலியல் ரீதியாக தன்னை மிரட்டினார் என புகாரில் கூறி உள்ளார்.

ரிச்சி படத்தின் இயக்குனரான ஹேமந்த் நடிகை தனது படத்தின் விளம்பர பணிகளுக்கு வருவதில்லை என பிலிம் சேம்பரில் 2023-ம் ஆண்டு புகார் அளித்திருந்தார். பிலிம் சேம்பர் தலையிட்டு இருவரையும் சமரசம் செய்து வைத்தனர். இந்நிலையில் ஹேமந்த் மீது நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com