லோகேஷ் கனகராஜ் நடிக்கும் “டிசி” படத்தின் டைட்டில் டீஸர் வெளியீடு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா நடிக்கும் ‘டிசி’ படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. தற்போது ரஜினியை வைத்து 'கூலி' என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும், கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார். இது தவிர தனது ஜிஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘டிசி’ எனப் பெயரிட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் டைட்டில் டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும் சந்திராவாக வாமிகா கபியும் நடித்துள்ளனர். புரோமோவில் ரத்தகறையுடன் லோகேஷ் கனகராஜ் நடந்துவருவதும் பாலியல் தொழிலாளியாக வாமிகாவும் நடித்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படம் ஒரு அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது.






