சிம்பு படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

தயாரிப்பாளர் அர்ச்சனா, சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிம்பு படத்தின்  அப்டேட் கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 3 புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகின.

'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகாக 'எஸ்டிஆர் 51' என பெயரிடப்பட்டிருந்த நிலையில், படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்துக்கு 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. அந்த படத்தை ஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அரசன் படத்தில் சிம்பு நடிக்க தொடங்கினார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் சிம்பு படம் விரைவில் தொடங்கும் என்று அஸ்வத் மாரிமுத்து அப்டேட் கொடுத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com