

சென்னை,
‘தர்மன்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் குறித்த அறிவிப்பை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந்தேதி இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா, ஸ்ரீலீலா, சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து புகைப்படங்களைப் பகிர்ந்து அறிவித்திருந்தார். தற்போது மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு புரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக அவர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘தர்மன்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் குறித்த அறிவிப்பை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந்தேதி இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
அன்று ‘தர்மன்’ படத்தின் டீசர் அல்லது முக்கிய முன்னோட்டக் காட்சி வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.