

‘சீன்’ திரைப்பட இயக்குநர் ஜித்து மாதவனின் கதைக்கு நான் பெரிய ரசிகன் என்று மகேஷ் பாபு பாராட்டியுள்ளார்.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘சீன்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 6-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்தில் 'ஆவேசம்', 'ரோமன்சம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
‘சீன்’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ.145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் ‘சீன்’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தைப் பார்த்த பிறகு இயக்குநர் அட்லீ வெளியிட்ட பதிவில் “நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல கமர்ஷியல் படத்தை பார்த்துள்ளேன். ஜித்துவின் கதைக்கு நான் பெரிய ரசிகன். ஆனால் இது மிகவும் ஸ்பெஷலானது. சூர்யாவின் நடிப்பு ஸ்டன்னிங். நஸ்லென் எப்படிபட்ட நடிகர். ஒரு சூப்பர்ஸ்டார் உருவாகிறார். அவர் கண்டிப்பாக இந்த துறையை ஆளபோகிறார். நஸ்ரியா, உங்களின் காமெடியும், சுட்டித்தனமும் அற்புதம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.