உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ பதிலடி

திரையுலகப் பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்துப் பேசிய அட்லீ, தொழிலதிபர் ஆனந்த் அம்பானியின் நட்பை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ பதிலடி
Published on: 

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவர்களுக்கு இயக்குநர் அட்லீ தனது பதிலடியைக் கொடுத்துள்ளார்.

திரையுலகில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட பிரபல இயக்குநர் அட்லீ, தனது நிறம் மற்றும் உருவம் குறித்து இணையதளங்களில் பரப்பப்படும் விமர்சனங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

இந்த நிலையில், பத்தா வெற்றி விழாவில் பேசிய அட்லீ, “நான் கருப்புதான். இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. என்னுடைய தோற்றத்தையும் நிறத்தையும் வைத்து என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என்னோட பதில்..என்னோட படம் தான். இது என்னுடைய அடையாளம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனந்த் அம்பானி ஆதரவு

தனது கடினமான காலங்கள் மற்றும் திரையுலகப் பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்துப் பேசிய அட்லீ, தொழிலதிபர் ஆனந்த் அம்பானியின் நட்பை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். நான் திரையுலகில் போராடிக் கொண்டிருந்த காலத்தில், எனக்குப் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் நின்றவர் ஆனந்த் அம்பானி மட்டுமே என்று சுட்டிக்காட்டிய அட்லீ, உண்மையான நட்பும் ஆதரவும் நபர்களின் உருவத்தையோ நிறத்தையோ பார்த்து வருவதில்லை என்பதைத் தனது பேச்சின் மூலம் உணர்த்தியுள்ளார்.

இணையத்தில் பரப்பப்படும் நிறவெறி மற்றும் உருவக் கேலி கலாச்சாரத்திற்கு எதிராக அட்லீ தைரியமாகப் குரல் கொடுத்துள்ளதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். கடின உழைப்பாலும் திறமையாலும் இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குநராக உருவெடுத்துள்ள அட்லீயின் இந்த நெகிழ்ச்சியான பேச்சு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com