ஷாருக்​கானுடன் மீண்​டும் இணை​யும் இயக்குநர் அட்லீ

‘கிங்’ படத்தை முடித்​து​விட்​டு, ஷாருக்​கான் ‘ஜ​வான் 2’ படத்​தின் பணி​களை தொடங்​கு​வார் என்ற தகவல் வெளி​யாகி​யுள்​ளது.
ஷாருக்​கானுடன் மீண்​டும் இணை​யும் இயக்குநர் அட்லீ
Published on

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜ​வான்’. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்து கலக்கிருப்பார். அனிருத் இசை அமைத்​திருந்​தார். தமிழ், தெலுங்​கு, இந்தி மொழிகளில் வெளி​யான இப்​படம் மூலம் பாலிவுட்​டுக்கு சென்​றார் அட்லி. இப்​படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்​தது.

இந்​நிலை​யில் ‘ஜ​வான்’ படத்​தின் 2-ம் பாகம் உரு​வாக இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. ஷாருக்​கான் இப்​போது சித்​தார்த் ஆனந்த் இயக்கும் ‘கிங்’ படத்​தில் நடித்து வரு​கிறார். அட்​லி, ‘ராக்​கா’ படத்தை இயக்கி வரு​கிறார். இப்​படங்​களை முடித்த பிறகு அட்லீயும், ஷாருக்​கானும் மீண்​டும் இணை​கின்​றனர். அது ‘ஜவான்’ படத்​தின் 2ம் பாகம் என்​கிறார்​கள்.

‘ஜ​வான் 2’ படத்​துக்​கான கதை மற்​றும் திரைக்​கதை கடந்த சில கால​மாகவே உரு​வாக்​கப்​பட்டு வந்​தன. சில வாரங்​களுக்கு முன்​பு, திரைக்​கதை இறுதி செய்​யப்பட்​டது. ‘கிங்’ படத்தை முடித்​து​விட்​டு, ஷாருக்​கான் இந்​தப் படத்​தின் பணி​களைத் தொடங்​கு​வார் என்ற தகவல் வெளி​யாகி​யுள்​ளது. ‘ஜவான்’ படத்​தில் விஜய் சேதுபதி வில்​ல​னாக நடித்​தார். அதே போல இந்​தப் படத்​தில் தமிழ் சினி​மா​வின் முன்​னணி​ ஹீரோ ஒரு​வரை வில்​ல​னாக நடிக்க வைக்க அட்லீ திட்​ட​மிட்​டுள்​ளார்​.

‘ஜவான்’ திரைப்படமே ஷாருக்​கானுக்கு முதல் தேசிய விருதை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com