''பாதம் தொட்டு கேட்கிறேன்..'' - ''பறந்து போ'' பட விழாவில் உணர்ச்சிவசப்பட்ட இயக்குனர் பாலா


Director Bala gets emotional at the Paranthu po trailer launch ceremony
x

''பறந்து போ'' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

சென்னை,

ராம் இயக்கியுள்ள பறந்து போ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலா கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய பாலா உணர்ச்சிவசப்பட்டார். அவர் கூறுகையில், ''திரைப்பட விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து ''பறந்து போ'' படத்தை எப்படியாவது மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்துவிடுங்கள். உங்களுடைய பாதம் தொட்டு வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் ராம் மாதிரி ஒரு இயக்குனர் நமக்கு வேண்டும். தமிழ்நாட்டிற்கு தேவை. இப்படம் என்னை மிகவும் பாதித்தது'' என்றார்

எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story