பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு இயக்குனர் சேரன் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு இயக்குனர் சேரன் இரங்கல்
Published on: 

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு இயக்குனர் சேரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து’, ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ உள்ளிட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார். அவருக்கு வயது 75. சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த கிருஷ்ணராஜ், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகரான இவர், தேவாவின் இசையில் பல்வேறு ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். ‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து’ பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணராஜ் மறைவுக்கு இயக்குனர் சேரன் இரங்கல்

இந்த நிலையில் பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு இயக்குனர் சேரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் “சகோதரர் கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவு பெரும் துயர் தருகிறது. எதிர்பாராத சோகம்... தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலுக்கு உயிர் கொடுத்த குரல், இன்று இல்லை என்ற செய்தி தாங்க முடியாதது. என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று கூறியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com