விஜய் ரசிகர்களுக்கு இயக்குநர் சேரன் அறிவுரை

விஜய்யை இயக்குநர் சேரன் விமர்சித்திருந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் ரசிகர்களுக்கு  இயக்குநர் சேரன் அறிவுரை
Published on

வருகிற தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.சு, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவினை தெரிவித்திருந்தார் இயக்குநர் சேரன்.

நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை அவர் சாடி, “வீரவசனம் பேசாம கொள்கை குறித்து பிரசாரத்தில் பேசுங்கள்” என பல விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் “விஜய் அவர்களின் அன்பு ரசிகர்களுக்கு...” குறிப்பிட்டு சேரன் மீண்டும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “நானும் விஜயை ரசித்தவந்தான்... அவர் திரைத்துறையில் ஒரு தன்னிகரில்லா இடத்தில் இருப்பவர்தான்... ஆனால் அரசியல் என வரும்போது அதை பல கோணங்களில் நாம் சிந்தித்து கையாள வேண்டி இருக்கிறது... அரசியல் என்பது ஒரு தலைவனின் வாழ்க்கை அல்ல... மக்களின் வாழ்க்கை... அந்த மக்கள் அறியாமையில் அவரை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் கண்மூடித்தனமாக நடந்து கொண்டால் பாதிக்கப்படப்போவது நாம்தான்...

நீங்கள் ஒரு கருத்து வைத்தவரை ஆபாச வார்த்தைகள் பேசி அவர் பேசுவதை நிறுத்திவிடலாம் என நினைப்பதே உங்களுக்கு எந்த அளவு அரசியல் அறிவு இருக்கிறது என்பதை காட்டுகிறது. இதை படிக்கும்போது மக்கள் உங்களை பற்றி, உங்கள் தலைவர் பற்றி என்ன நினைப்பார்கள் என சிந்திக்கவும்... நல்ல விஷயங்களை பகிர நினைப்பவனும் அடுத்த தலைமுறையை போதையிலிருந்து மீட்டெடுக்க நினைப்பவனும் என்றும் உன் தகாத பேச்சுக்கெல்லாம் அசரமாட்டான்... நீங்க பேசுங்க தம்பிகளா... நான் உன் குடும்பத்தில் மூத்தவன் தான்... கடைசியில நீங்க உங்க வீட்டுல மனைவி குழந்தைகளோட நிக்கும்போது இந்த அண்ணன்கள் சொன்னது என்னவென புரியும்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com